2021 ஜனவரி 16, சனிக்கிழமை

ராஜீவ் கொலை வழக்கு: இலங்கைக்கு மாற்ற கோரிக்கை

Kanagaraj   / 2016 ஜூலை 13 , மு.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக்கப்பட்டு சிறைவாசம் அனுபவித்து வருகின்ற சாந்தன், தன்னை இலங்கைச் சிறைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கைத் தூதரகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதேவேளை, அவரது உணர்வை மதிக்க வேண்டும். செய்யாத குற்றத்திற்காக தழிழக சிறையில் உள்ள போது தனது தந்தையை இழந்துள்ளார். இலங்கை சிறையில் இருந்தால அவரது உறவினர்கள் அவரை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர் கடிதம் எழுதியுள்ளார். ஆனால் குற்றமற்றவர் என்று நிருபிப்பதற்கே நாம் போராட வேண்டியுள்ளது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசாங்கம் குளிர்கால கூட்டதொடரில் தனி சட்டத்தை நிறைவேற்றி அடுத்தாண்டு ஜல்லிகட்டு நடத்த வழிவகை செய்தால் பாராட்டுக்கு உரியதாக இருக்கும்.

சட்டத்தரணிகள், இலங்கை பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு தமிழ் உணர்வுக்காக போராட்டம் நடத்தியுள்ளனர். ஆனால், அவர்களின் போராட்டத்துக்கு அனைவரும் ஆதரவு தராதது வருத்தம் அளிக்கிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .