2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

வாக்காளர் அட்டைகள் கிடைக்காதவர்களுக்கு முக்கிய அறிவித்தல்

Editorial   / 2019 நவம்பர் 10 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கை நேற்று (09) நிறைவடைந்துள்ளதுடன்,  98 சதவீதமான வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இதுவரை தமது வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறாதவர்கள், பிரதேசத்துக்கு பொறுப்பான தபால் அலுவலகத்தில் அவற்றை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் கூறியுள்ளார்.

விநியோகிக்கப்படாத உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் 16ஆம் திகதி வரை தபால் அலுவலகங்களில் வைக்கப்படும் எனவும் தபால்மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனடிப்படையில், ஞாயிற்றுக்கிழமை தவிர்ந்த ஏனைய தினங்களில், தமது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தி வாக்காளர் அட்டைகளை பெற்றுக்கொள்ளமுடியும் என தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .