2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை

Editorial   / 2018 ஓகஸ்ட் 18 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கணேசன்

அட்டன் - கொழும்பு பிரதான வீதியில் ஸ்டிரதன் பகுதியில் நிலவும் மண்சரிவு அபாயநிலை காரணமாக, வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனங்களை செலுத்த வேண்டும் என பொலிஸார் வேண்டுக்கோள் விடுத்துள்ளனர்.

அட்டன் - கொழும்பு பிரதான வீதியில் ஸ்டிரதன் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக, நேற்று காலை அவ்வீதி தற்காலிகமாக மூடப்பட்டு, மண்சரிவு அகற்றப்பட்ட பின்னர், போக்குவரத்து வழமைக்கு திரும்பின.

தொடர்ந்தும், நேற்று மாலை அவ்வீதியில் ஏற்பட்ட மண்சரிவுடன் வீதி முற்றாக மூடப்பட்டது. இதனால் வாகன சாரதிகள் பல்வேறு அசௌகரியங்களுக்குள்ளாகினர்.

அதனை தொடர்ந்து வீதி அதிகார சபையினரும், அட்டன் பொலிஸாரும் இணைந்து அவ்வீதிக்கு அருகில் புதிய வீதியை அமைத்து நேற்றிரவு 10 மணி முதல், அவ்வீதியில் ஒரு வழி போக்குவரத்தாக மாற்றினர். அதன் பின் அவ்வீதியின் போக்குவரத்து ஒருவழி போக்குவரத்தாக இடம்பெற்று வருகின்றது.

எனினும் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக, அப்பகுதியில் மண்சரிவு ஏற்பட்ட வண்ணமே உள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .