2021 ஜனவரி 16, சனிக்கிழமை

வடக்கு, கிழக்கு தனித்தனியாக அபிவிருத்தி செய்யப்படும்

Kamal   / 2019 நவம்பர் 09 , பி.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதியதொரு வைத்தியசாலையை அமைத்துகொடுக்கவுள்ளதாக வாக்குறுதியளிக்கும் அமைச்சர் சஜித் பிரேமதாஸ, வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு தனித்தனியான சர்வதேச உதவிக்கோரல் மாநாடுகளை நடத்துவதாகவும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு களுதாவலை பொது மைதானத்தில் இன்று (09) ந​டைபெற்ற புதிய ஜனநாயக முன்னணியின் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர், 

மட்டக்களப்பு மாவட்டத்துக்கான புதியதொரு பொது வைத்தியசாலையை உருவாக்குவதாகவும், கிராமிய வைத்தியசாலைகளும் அபிவிருத்தி செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

அதேபோல் மட்டக்களப்பின் விவசாய செயற்பாடுகளை தரமாக முன்னெடுக்கும் வகையிலான அபிவிருத்திகள் செய்துகொடுக்கப்படும் எனத் தெரிவித்த அவர், வடக்கு, கிழக்கு மக்களை சகலருமே ஒரு ஆயுதமாக மட்டுமே பயன்படுத்திகொண்டனர் எனவும் தெரிவித்தார்.

யுத்த காலத்தின் கிழக்கு மாகாணத்தை ​மய்யப்படுத்தி சர்வதேச உதவிக்கோரும் மாநாடொன்றை நடத்தியிருக்கலாம் எனவும், இதற்கும் முன்பிருந்த அரசாங்கங்கள் அதை செய்யத் தவறியிருந்தாலும் தனது ஆட்சியில் வடக்கு,கிழக்கு மாகாணங்களுக்கு தனித்தனியே சர்வதேச உதவிக்கோரல் மாநாடுகளை நடத்தி விஷேட அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்வதாவும் உறுதியளித்தார். 

அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் 14 தொழில் பேட்டைகள் ஆரம்பிக்கப்படும் எனவும், நாடளாவிய ரீதியில் தொழில்நுட்ப கல்லூரிகள் உருவாக்கி கொடுக்கப்படவுள்ளதோடு, பட்டிருப்பு பகுதியிலும் தொழில்நுட்ப கல்லூரிகள் உருவாக்கப்படும் என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .