2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் பணி ஆரம்பம்

Editorial   / 2020 மார்ச் 12 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்கும் நடவடிக்கை இன்று (12) ஆரம்பிக்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மாவட்ட செயலகங்களூடாக இதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் 19ஆம் திகதி நண்பகல் 12 மணிவரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.

அத்துடன், பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளவர்கள் எதிர்வரும் 19ஆம் திகதி வரை கட்டுப்பணம் செலுத்த முடியும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

வேட்பாளரிடமிருந்து 2,000 ரூபாய் கட்டுப்பணமாக அறவிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X