Editorial / 2019 நவம்பர் 14 , மு.ப. 09:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி வேட்பாளர்களின் சுவரொட்டிகள், பதாகைகள், கட் அவுட்கள் உள்ளிட்ட விளம்பரங்களை அகற்றுவதற்கு இன்று (14) நண்பகல் 12 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன் பின்னரும், விளம்பரங்களை அகற்றாத நபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய கூறியுள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள மஹிந்த தேசப்பிரிய ,“பிரசாரங்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கும் இந்தக் காலப்பகுதியில், தேர்தல் அலுவலகங்களை நடாத்திச் செல்ல முடியாது, அலுவலகங்கள் இருந்தால் பரவாயில்லை, ஆனால் கட் அவுட், உள்ளிட்டவற்றை அகற்ற வேண்டும். மாவட்ட ரீதியில் ஸ்தாபிக்கப்பட்ட அலுவலகங்களை தொடர்ந்து நடத்திச் செல்ல முடியும்.
அந்த அலுவலகங்கள், வாக்களிப்பு நிலையத்திற்கு 500 மீற்றர் தூரத்துக்குள் அமைந்திருக்கும் பட்சத்தில் அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாகைகள் நீக்கப்பட வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
9 hours ago
23 Nov 2025
23 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
23 Nov 2025
23 Nov 2025