2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

வடமாகாண அனைத்து நிர்வாக அலகுகளும் கிளிநொச்சிக்கு மாற்றப்படும்

Suganthini Ratnam   / 2010 ஜூலை 05 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமாகாணத்திற்கான அனைத்து நிர்வாக அலகுகளும் அடுத்த மாதம் கிளிநொச்சி அறிவியல் நகரத்திற்கு இடமாற்றப்படுமெனவும், அதற்கேற்ப அனைத்து அமைச்சுக்குமான இடங்கள் தெரிவு செய்யப்பட்டிருப்பதாகவும் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்தார்.

இதன் முதற்கட்டமாக ஆளுநர் அலுவலகமும், வடமாகாணத்திற்கான மாகாண பொது நிர்வாக செயலகமும் அடுத்த மாதம் முதலாம் திகதி கிளிநொச்சியில் திறக்கப்படவிருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில், படிப்படியாக பிரதம செயலாளர் அலுவலகம் மற்றும் மாகாணத்தில் அனைத்து அமைச்சுக்களும் உப பிரிவுகளும் கிளிநொச்சி நகருக்கு மாற்றப்படுமெனவும் வடமாகாண ஆளுநர் குறிப்பிட்டார்.

மாகாண ஆளுநரின் வழிகாட்டலில் மாகாண பொது நிர்வாக அமைச்சின் பிரதிப் பிரதம செயலாளர் ரி.இராசநாயகம் இது தொடர்பான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--