Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஜூலை 19 , மு.ப. 12:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமத்திய மாகாண சபையின் தலைவருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை அடுத்து, அந்த மாகாண சபையில் பெரும் பதற்றமான நிலைமையொன்று, நேற்று (18) ஏற்பட்டது.
மாகாண சபையில், ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களில் 11 பேர், அந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைத்திருந்தனர்.
எனினும், அந்தப் பிரேரணை நிராகரிக்கப்பட்டது.
எனினும், அந்த யோசனையானது, மாகாண சபையின் செயலாளரினால், ஒழுங்குப்பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தது. இதனையடுத்தே, சபைக்குள் பெரும் களேபரம் ஏற்பட்டது. இதனால், சபையை கட்டுப்படுத்த முடியாத நிலைமை சபைத்தலைவருக்கு ஏற்பட்டது.
களேபரத்துக்கு மத்தியில், செங்கோலை ஒரு தரப்பினர் தூக்கிக்கொண்டனர். இன்னொரு தரப்பினர் அதனைப் பிடுங்குவதற்கு முயன்றனர். இதனால், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் செங்கோலை பிடுங்கிக்கொள்வதற்கான இழுபறியான நிலைமையொன்று ஏற்பட்டது.
இந்நிலையில், அந்தச் சபைக்கான செங்கோல் முறிந்துவிட்டதாக சபைத் தகவல் தெரிவிக்கின்றது. இந்தப் பதற்றமான நிலைமையை அடுத்து, சபை நடவடிக்கைகள் எதிர்வரும் 8ஆம் திகதிக்கு நேற்று பிற்பகல் 2 மணியளவில் ஒத்திவைக்கப்பட்டன.
எனினும், புதிய சபைத்தலைவரை நியமித்துகொண்டு, சபை நடவடிக்கையை முன்கொண்டு செல்வதற்கு, ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், அம்முயற்சி கைகூடவில்லை.
நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்ட தலைவரான டி.எம்.ஆர். சிறிபால, சபைக்கு நேற்றையதினம் தலைமை தாங்கிய நிலையிலேயே, எதிர்க்கட்சி உறுப்பினர்களால், கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிலையில், வடமத்திய மாகாண சபையில் ஏற்பட்ட குழப்பம் மற்றும் பதற்றமான நிலைமையின் பின்னர், இடம்பெற்ற நீண்டநேர வாத விவாதங்களுக்கு பின்னர், அந்தச் சபையின் புதிய தலைவராக டி.எம்.அமரதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
7 hours ago
9 hours ago
22 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
22 Oct 2025