Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 03 , மு.ப. 04:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மேனகா மூக்காண்டி
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற யுத்தத்தின் போது அழிவடைந்த மற்றும் பகுதியளவில் சேதமடைந்த விகாரைகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களைப் புனரமைப்பதற்கு, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
இது தொடர்பில், தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கே, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
இந்நிலையில், பிரதேச செயலாளர்களின் கண்காணிப்பின் கீழ், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், யுத்தத்தினால் பாதிப்புக்குள்ளான விகாரைகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை துரித கதியில் புனரமைப்புக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
13 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago