2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

வெனிசூலாவில் நாடு கடந்த அரசு அமைப்பு; அறிக்கைக்கு காத்திருப்பதாக தகவல்

Super User   / 2010 மே 19 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெனிசூலாவில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவது தொடர்பிலான அறிக்கையை இன்னும் சில நாள்களில் பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்த்திருப்பதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன. 

டெயிலிமிரர் இணையதளத்திற்கு இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அந்த வட்டாரத் தகவல்கள், வெனிசூலாவில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஹவானாவிலுள்ள இலங்கைத் தூதுவர் கூறியதாகவும், இதனையடுத்தே மேற்படி அறிக்கைக்கு காத்திருப்பதாகவும் குறிப்பிட்டன.

இந்நிலையில், வெனிசூலா அரசாங்கத்துடன் இது தொடர்பிலான கலந்துரையாடல்களில் தற்போது ஹவானாவிலுள்ள இலங்கைத் தூதுவர் தமரா குலநாயகம் ஈடுபட்டுவருவதுடன், இலங்கை அரசாங்கத்திடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படவிருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சு வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன. 

ஐரோப்பிய நாடுகளில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்ற நிலையில்,  வெனிசூலாவிலும் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக நம்பப்படுகிறது.

இந்நிலையில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைப்பதற்கான முதலாவது அமர்வு அமெரிக்காவின் பிலடெனியா நகரில் கடந்த 17ஆம் திகதி ஆரம்பமாகி தொடர்ந்து 3 நாள்கள் நடைபெற்றுவருகிறது.

இதற்கிடையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைப்பதற்கான ஆதரவினை வழங்க வேண்டாமென சர்வதேசத்திடம் இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்திருக்கிறது.

இது இவ்வாறிருக்க, புலம்பெயர் தமிழ் மக்கள் மற்றும் சர்வதேச ஊடகங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயாரென அண்மையில் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--