2020 நவம்பர் 01, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் மாணவி படுகாயம்; சாரதி கைது

Editorial   / 2018 செப்டெம்பர் 18 , பி.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதி, கொட்டகலை நகரில், இன்று (18) இடம்பெற்ற விபத்தில், பாடசாலை மாணவி ஒருவர் படுகாயமடைந்த நிலையில், நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹட்டனிலிருந்து - தலவாக்கலை நோக்கிப் பயணித்த காரொன்றில் மோதுண்டே மேற்படி மாணவி காயமடைந்துள்ளார்.

ஹட்டனிலுள்ள பாடசாலையொன்றில் கல்வி பயிலும் மேற்படி மாணவி, பாடசாலை முடிந்து வீடு செல்ல முற்பட்டபோதே, விபத்தை எதிர்கொண்டுள்ளார்.

விபத்தில் காயமடைந்த மாணவி, கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய காரின் சாரதியைக் கைதுசெய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--