Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜனவரி 14 , மு.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட லயன் எயார் விமானத்தில் உயிரிழந்த இருவரின் சடலங்கள் மீதான பிரேத பரிசோதனைகள் இன்று (14) மேற்கொள்ளப்படவுள்ளன.
உயிரிழந்தவர்களின் உறவினர்கள் இலங்கைக்கு வருகை தந்ததன் பின்னர், பிரேத பரிசோதனைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நீர்கொழும்பு வைத்தியசாலையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
உறவினர்கள் நாட்டுக்கு வந்த பின்னரே, சம்பவம் தொடர்பில் அடுத்தகட்ட நடவடிக்கைககளை மேற்கொள்ள முடியும் என இலங்கைக்கான இந்தோனேஷிய தூதரகம் கூறியுள்ளது.
உயிரிழந்த இருவரின் சடலங்கள் நீர்கொழும்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.
குறித்த விமானத்தில் பயணித்த நிலையில் உயிரிழந்த இருவரது சடலங்கள் நேற்று (13) காலை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டன.
இந்தோனேஷிய பிரஜைகளான 64 வயது ஆண் மற்றும் 74 வயது பெண் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
285 பயணிகளுடன் பயணித்த லயன் எயார் விமானம் நேற்று (13) அதிகாலை 2.45 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையில் அவசரமாக தரையிறக்கப்பட்டிருந்தது.
சவூதி அரேபியாவில் இருந்து இந்தோனேஷியா நோக்கி சென்ற விமானத்தில் பயணித்த பயணிகள் இருவருக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனத்துக்கு சிகிச்சையளிக்கும் நோக்கில் விமானம்தரையிறக்கப்பட்டது.
எனினும், குறித்த பயணிகள் இருவரும் உயிரிழந்த நிலையிலேயே வைத்தியசாலைக்கு கொண்டுச்செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
5 hours ago
8 hours ago
19 Sep 2025
19 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
19 Sep 2025
19 Sep 2025