George / 2016 ஜூலை 31 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
12 வயதான சிறுமியை பல இடங்களுக்கு கொண்டுசென்று வன்புணர்வுக்கு உட்படுத்திய,12 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்களில் இராணுவ வீரர், பிக்கு, அறையை வாடகைக்கு வழங்கிய நபர் உள்ளிட்டவர்களும் அடங்குகின்றனர்.
12 வயதான குறித்த சிறுமியை கடந்த ஜூன் 10 ஆம் திகதி முதல் காணவில்லையென பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
அனையடுத்து,பொலிஸார் முன்னெடுத்த தீவிர தேடுதல் நடவடிக்கையின் பின்னர் குறித்த சிறுமி, 21ஆம் திகதி மீட்கப்பட்டார்.
அக்குரஸ்ஸ மற்றும் பிட்டபெத்தர பகுதிகளில்வைத்து குறித்த சிறுமி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிய வருகின்றது.
பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய நபர்கள் சிறுமியை விடுத்தையடுத்து, அவர் விகாரைக்கு சென்றுள்ளார். அங்கு பிக்கு ஒருவர் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார்.
விகரையிலிருந்து தப்பிச்சென்ற சிறுமியை, காலியிலுள்ள சுற்றுலா விடுதியில் நபரொருவர் விற்பனை செய்துள்ளதுடன் அவர் சிறுபிள்ளைகளை கடத்தும் நபர் என தெரிவிக்கப்படுகின்றது.
19 minute ago
37 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
37 minute ago
43 minute ago