2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

வெற்றியாளரை இன்று மாலை அறிவிப்பதற்கான சாத்தியம்

Editorial   / 2019 நவம்பர் 17 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

2019 ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற வேட்பாளரை என்பதை இன்று மாலை 4.00 மணிக்கு முன்னர் அறிவிக்கக்கூடியதாக இருக்கும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அனைத்து முடிவுகளையும் இன்னும் ஒரு சில மணித்தியாலங்களுக்குள் வெளியிடக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். 

இது வரையில் ஒரு கோடி 9 இலட்சம் வாக்குகள் எண்ணப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

நேற்று நடைபெற்ற தேர்தலில் ஒரு கோடியே 59 இலட்சத்து 92 ஆயிரத்து 96 பேர் வாக்களிக்க தகுதி பெற்றதுடன், இவர்களில் சுமார் 80 சதவீதமானோர் வாக்களித்திருந்தனர். 

கேகாலை, இரத்தினபுரி உள்ளிட்ட பிரதேசங்களில் நேற்று இடம்பெற்ற சீரற்ற காலநிலையினால் வாக்குள் எண்ணும் பணி தடைப்பட்டத.

இந்த நிலையில், இன்று(17)  பிற்பகல் 3.00 மணிக்கும் 4.00 மணிக்கும் இடையில் வெற்றி பெற்ற வேட்பாளரை அறிக்கக்கூடிதாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .