2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

வில்பத்து தேசிய பூங்கா பாதுகாவலர் இருவர் பாதுகாப்பு படையினரால் தாக்குதல்

Super User   / 2010 மே 25 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

வில்பத்து தேசிய பூங்காவுக்கான சுற்றுலாவை மேற்கொண்டிருந்த 15 சிவில் பாதுகாப்புப் படையினர் உள்ளிட்ட சுற்றுலாப் பயணிகள் அங்குள்ள பூங்கா பாதுகாவலர் இருவரையும், சாரதிகள் இருவரையும் தாக்கியுள்ளனர்.

அத்துடன், இரண்டு வாகனங்களையும் மேற்படி சுற்றுலாப் பயணிகள் அடித்து சேதமாக்கியிருப்பதாக நொச்சியாகம பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் தமக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றிருப்பதுடன், தற்போது விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

40 பேரைக்கொண்ட  சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று பூங்கா வழிகாட்டிகள் இருவருடன் வில்பத்து தேசியா பூங்காவுக்கு நேற்று மாலை சென்றிருந்தனர்.

மேற்படி பூங்கா வளாகத்தினுள் மதுபானம் அருந்துவதற்கு தடைசெய்யப்பட்டிருந்த நிலையில், அதற்கு குறித்த பூங்கா வழிகாட்டிகள் இருவரும் மறுப்புத் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையிலேயே, மேற்படி சுற்றுலாப்  பயணிகளுக்கும் பூங்கா பாதுகாவலர்  மற்றும் சாரதிகளுக்கும் இடையில் கைகலப்பு  இடம்பெற்றதாக பூங்கா அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த பூங்கா பாதுகாவலர் இருவரும் பாதுகாப்பு படையினர் இருவரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--