2021 மே 08, சனிக்கிழமை

வலி நிவாரண மாத்திரைகளுடன் நபர் கைது

Princiya Dixci   / 2015 நவம்பர் 17 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

அநுராதபுரம், குருந்தன்குளம் பகுதியில் வலி நிவாரணத்துக்காகப் பயன்படுத்தப்படும் 783 மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவற்றை வைத்திருந்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.  

அநுராதபுரம் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இன்று செவ்வாய்க்கிழமை (17) நடத்தப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட இந்நபரிடமிருந்து 20 மில்லிகிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் மாத்திரைகளை, இளைஞர்களுக்கு விற்பனை செய்வதற்காகவே இவர் வைத்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X