2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

சண்டேலீடர் பிரதம ஆசிரியரின் குறிப்பேடு இன்று நீதிமன்றில் கையளிப்பு

Super User   / 2010 ஜூன் 21 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் பிரெட்ரிகா ஜேன்ஸ் 89 பக்கங்கள் அடங்கிய தனது குறிப்பேட்டை இன்று நீதிமன்றத்தில் கையளித்தார். 

இறுதிக்கட்ட யுத்தத்தில் வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் சிரேஷ்ட தலைவர்கள், அரசாங்கத்தின் உத்தரவின் பேரிலேயே சுட்டுக்கொல்லப்பட்டதாக கடந்த டிசம்பர் மாதம் ஜெனரல் சரத் பொன்சேகா சண்டே லீடர் பத்திரிகைக்கு பேட்டியளித்திருந்தார்.

இந்த பேட்டியினைப் பதிவு செய்த குறிப்பேட்டினை நீதிமன்றத்தில் கையளிக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் சம்பா ஜானகி ராஜரட்ண, குறித்த ஆசிரியருக்கு உத்திரவிட்டிருந்தார். இந்நிலையிலேயே குறித்த கையேடு பத்திரிகை ஆசிரியரால் இன்று மன்றில் கையளிக்கப்பட்டது.

இதனையடுத்து இந்த வழக்கு விசாரணையினை அடுத்த மாதம் 12ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிவான் அன்றைய தினத்தில் அவரை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--