Editorial / 2026 ஜனவரி 22 , மு.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

கணவர் வீட்டையே இரண்டாக்கும் காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
ஏன் இவ்வளவு கோபம்? மனைவி 1,500 யுவென் மதிப்புள்ள பாத்திரங்களைக் கழுவும் இயந்திரத்தை வாங்கியதுதான் அதற்குக் காரணம்.
சீனாவில் குவாங்டொங் (Guangdong) மாநிலத்தில் வசிக்கும் அந்தப் பெண் அந்தக் காணொளியை ஜனவரி 8ஆம் திகதி பதிவேற்றம் செய்ததாக South China Morning Post நாளேடு குறிப்பிட்டது.
குளிர்காலத்தில் குழாயிலிருந்து வரும் நீர் தமக்கு மிகவும் குளிராக இருப்பதால் பாத்திரங்களைக் கழுவ இயந்திரம் தேவைப்பட்டதாக அவர் சொன்னார்.
"என்னுடைய கணவர் எதையும் கழுவமாட்டார்" என்றார் அவர்.
தாங்கள் இருக்கும் வாடகை வீட்டில் ஊழியர் ஒருவர் அந்த இயந்திரத்தைப் பொருத்திக்கொண்டிருந்தபோதுதான் கணவருக்கு அது பற்றித் தெரியவந்தது.
அதனால் ஏற்படும் செலவுகளைத் தங்களால் சமாளிக்க முடியாது என்று அவர் சொல்லியிருக்கிறார். பெண் அதற்குச் செவி சாய்க்கவில்லை.
இயந்திரத்தைப் பொருத்தும் பணிகளை அவர் நிறுத்தச் சொல்லியும் மனைவி கேட்காததால் அவர் வீட்டில் உள்ள் பொருள்களை உடைக்கத் தொடங்கினார்.
அந்தப் பெண் அழுதுகொண்டே வீட்டிலிருந்து வெளியேறினார். அந்தப் பெண் இயந்திரத்தை மறுநாள் திரும்ப கொடுத்துவிட்டார். கோபத்தில் செய்த செயலுக்காக கணவர் மனைவியிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.
இணையவாசிகள் வெவ்வேறு கருத்துகளை முன்வைத்தனர்.
"அந்த ஆடவரை விவாகரத்து செய்யுங்கள்" என்றார் ஒருவர்.
"நிதி நெருக்கடி இருந்தால் ஆடம்பரச் செலவைத் தவிர்ப்பது நல்லது" என்று இன்னொருவர் கூறினார்.
18 minute ago
24 minute ago
30 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
24 minute ago
30 minute ago
32 minute ago