2021 ஏப்ரல் 12, திங்கட்கிழமை

வெள்ளத்தில் சிக்கிய பெண்ணை இருட்டுக்குள் இழுத்தவருக்கு வலை

Editorial   / 2017 ஜூன் 01 , மு.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெள்ள அனர்த்தத்தினால் சிக்குண்டிருந்த 79 வயதான பெண்ணைக் காப்பாற்றுவது போல காப்பாற்றி, அப்பெண்ணை வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கு முயன்றார் என்று குற்றஞ்சாட்டப்பட்ட மூன்று பிள்ளைகளின் தந்தையொருவரை தேடி (வயது 45) பொலிஸார் வலைவிரித்துள்ளனர்.  

மல்வானை, கீழ் மாபிட்டிகம பிரதேசத்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அந்தப் பெண்ணை, றம்புட்டான் தோட்டமொன்றின் இருட்டான பகுதிக்கு இழுத்துச் சென்றே, குறித்த நபர் வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கு முயன்றுள்ளார்.  

அதே பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட, சந்தேகநபர் அப்பிரதேசத்திலிருந்து தப்பியோடியுள்ளதாக அறியமுடிகிறது.  

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டிருந்த அந்த பெண், வெள்ளத்தில் நடந்து சென்றுகொண்டிருந்துள்ளார். 

அப்போது, அப்பெண்ணுக்கு உதவும் வகையில் வந்த குறித்த நபர், அப்பெண்ணை வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கு முயன்றபோது, அப்பெண் கூச்சலிட்டுள்ளார். 

அவ்வழியாக சென்றுகொண்டிருந்த இருவர், அபாயக்குரல் கேட்ட திசையைநோக்கி ஓடிச்சென்று பார்த்தபோது, அந்நபர் தப்பியோடி, ஒழிந்துகொண்டுள்ளார்.   

சம்பவத்தை கேள்வியுற்று, பொலிஸார் அவ்விடத்துக்கு விரைந்த போது, வெள்ள நீரில் நீந்தி அந்த நபர் தப்பிச்சென்றுவிட்டார். அந்த நபர் இனங்காணப்பட்டுள்ளார் என்றும் அவரைத் தேடி வலை வீசியுள்ளதாகவும் தொம்பே பொலிஸார் தெரிவித்தனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .