Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Editorial / 2017 ஜூன் 04 , பி.ப. 05:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய அடையாள அட்டைகளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இயற்கை அனர்த்தத்தால் எவரேனும் தேசிய அடையாள அட்டையை இழந்திருந்தால் அல்லது அடையாள அட்டை சேதமடைந்திருப்பின், அவர்களுக்கான புதிய தேசிய அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது.
பொலிஸில் முறைப்பாடு செய்து, கிராம உத்தியோகத்தர், பிரதேச செயலாளர் ஆகியோரின் அங்கிகாரத்துடன் சமர்ப்பிக்கும் விண்ணப்பத்தின் மூலம், தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ள முடியுமென ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்தார்.
இதேவேளை, வௌ்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரங்களின் பிரதிகளை வழங்குவதற்கும், மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம், நடவடிக்கை எடுத்துள்ளது.
அனர்த்தம் ஏற்பட்ட மாவட்டங்களின் பிரதேச செயலாளர்கள் ஊடாக, குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த அனர்த்தங்களால், சாரதி அனுமதிப்பத்திரம் அழிவடைந்துள்ளதாக, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருத்தல் அவசியமென, வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்து, கிராம சேவகரிடம் அத்தாட்சிப் பத்திரம் பெற்றிருத்தல் வேண்டுமென, வாகனப் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஜகத் சந்திரசிறி தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago