Editorial / 2017 ஜூலை 23 , பி.ப. 04:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் இருவர் வாள் வெட்டுக்கு இலக்காகி, படுகாயமடைந்த நிலையில், வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம், வவுனியா வைத்தியசாலைக்கு அருகில், நேற்று (22) இரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, தாக்குதலுக்கு இலக்கானவர்கள் பயணித்த மோட்டர் சைக்கிளும் உடைத்து நொருக்கப்பட்டுள்ளது.
வாள் வெட்டில் ஈடுபட்ட நபர்கள், அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக, வவுனியா பொலிஸார், விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .