2021 ஏப்ரல் 12, திங்கட்கிழமை

விக்கியின் திட்டத்தால் 'நல்லிணக்கத்துக்குக் குந்தகம்

Kogilavani   / 2016 ஏப்ரல் 01 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன், பிரிவினை, இனவாதத் திட்டமொன்றுடன் செயற்படுவதாகவும், இதனால் தேசிய நல்லிணக்கத்துக்குக் குந்தகம் விளைவிப்பதாகவும் ஜாதிக ஹெல உறுமய, நேற்று (31) குற்றஞ்சாட்டியது.

அரசாங்கம், உயர் பாதுகாப்பு வலயங்களை நீக்கியமை உட்பட, தேசிய நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் பல நடவடிக்கைகளை எடுத்துள்ள போதும், விக்னேஸ்வரன், இந்தத் திசையில் எவ்வித ஒத்துழைப்பையும் வழங்கவில்லை என ஜாதிக ஹெலஉறுமயவின் தேசிய அமைப்பாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க கூறினார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது மேற்கண்டவாறு தெரிவித்த அவர், மேலும் கூறியதாவது,
'வடமாகாண முதலமைச்சர், ஹிக்கடுவையில் இடம்பெற்ற 32ஆவது முதலமைச்சர்கள் மாநாட்டுக்கு வரவில்லை. இது, மாகாண சபைகளுக்குள்ள பிரச்சினைகளையிட்டு, ஏனைய முதலமைச்சர்களுடன் பேசக் கிடைத்த வாய்ப்பு. மேலும், அமைச்சரவைக் கூட்டங்களையும் விக்னேஸ்வரன் தவிர்த்து வந்துள்ளார்' எனக் கூறினார்.

' விக்னேஸ்வரன் அரசியலமைப்புக்கு மாறாக நடந்துகொண்டால், அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும். விக்னேஸ்வரனின் நடத்தைகளின் பின்னணியிலுள்ள காரணங்களை வெளிக்கொணர்வது, ஆளுநரின் பொறுப்பாகும்' என அவர் கூறினார். 'கடந்த மூன்று வருடங்களில், வடக்குத் தமிழர்களின் உயர்வுக்காக என்ன செய்துள்ளார் எனக் கூறமுடியுமா?' என வர்ணசிங்க, முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு சவால் விடுத்தார்.

வட மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 20 சதவீதம் மட்டுமே செலவளிக்கப்பட்டது எனவும் மீதி திறைசேரிக்குத் திரும்பி வந்துவிட்டதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .