2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

வெசாக் பார்த்துவிட்டு திரும்பியோர் விபத்தில் சிக்கினர்: இருவர் பலி

Kanagaraj   / 2016 மே 23 , பி.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிலிமத்தலாவ, இலுக்வத்த சந்தியில், பால்சேகரிக்கும் பௌசரும், காரொன்றும் நேருக்கு நேர், நேற்றுத் திங்கட்கிழமை மாலை மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவத்தில் காரை ஓட்டிச்சென்றவரும் அவருடைய தாயும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

காரிலிருந்த 7 வயது பிள்ளையும், மற்றுமொரு பெண்ணும் படுகாயமடைந்த நிலையில் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கடுகண்ணாவ பொலிஸார் தெரிவித்தனர்.

புஸ்ஸலாவை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட இவர்கள், வெசாக் பார்ப்பதற்காக கொழும்புக்குச் சென்று திரும்பிக்கொண்டிருந்த போதே இவ்வனர்த்தத்துக்கு முகங்கொடுத்துள்ளனர் என்று அறியமுடிகின்றது.
பால் பௌசரின் சாரதி, கைதுசெய்யப்பட்ட கண்டி நீதிமன்ற நீதவானின் உத்தரவின் பிரகாரம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .