2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

விபத்துக்கள் 13 சதவீதம் அதிகரிப்பு

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 26 , மு.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

நத்தார் பிறந்ததுடன் இடம்பெற்ற அவசர விபத்துக்களின் எண்ணிக்கை, கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் நூற்றுக்கு 13 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவரச விபத்துச் சேவைகள்; பிரிவு அறிவித்துள்ளது.

இடம்பெற்ற விபத்துக்களினால் காயமடைந்த 254 பேர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். இதேவேளை, கடந்த வருடம் இதே காலப்பகுதியில் காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 219ஆகும் என்று தேசிய வைத்தியசாலையின் ஒருங்கிணைப்பாளர் புஸ்பா ரம்யணி டி சொய்சா தெரிவித்தார்.

23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணிமுதல், சனிக்கிழமை நள்ளிரவு 12 மணிவரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற விபத்துக்களில் காயமடைந்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 95 ஆகும். அதிலொருவர் மரணமடைந்துள்ளார். வீதி விபத்துக்கள் 63 இடம்பெற்றுள்ளன. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இது 20 சதவீதமாகும்.
அதில், 39 சம்பவங்கள் வீட்டு விபத்துக்களினால் இடம் பெற்றுள்ளன. 13 சம்பவங்கள் வன்முறைகளாகும்.

பட்டாசு வெடிவிபத்துக்கள் மற்றும் வானவேடிக்கைகளினால், எரிகாயங்களுக்கு உள்ளானவர்களும் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின், அவரச விபத்து பிரிவு அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .