2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

விபத்தில் சிறுவன் பலி

Kanagaraj   / 2016 ஜூலை 20 , மு.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்  

அம்பாறை பொத்துவில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஏத்தம் குஞ்சான் ஓடைப்பாலத்தின் அருகில் நேற்று (19) இரவு 6.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் 9வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

திருக்கோவில் பிரதேசத்தை சேர்ந்த குடும்பமொன்று மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளது. அச்சைக்கிள், வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திர பெட்டியுடன்  மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளது.

உகந்தையிலிருந்து திருக்கோவில் பிரதேசத்தை நோக்கி  பயணித்துக் கொண்டிருக்கும் போது முன்னால் வந்த வாகனமொன்றிற்கு வழிவிட முயற்சிக்கும் போதே சைக்கிள், உழவு இயந்திர பெட்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திய உயிரிழந்த சிறுவனின் 31வயதுடைய தந்தையும் 28வயதுடைய தாயும் பலத்த காயங்களுக்குள்ளானதுடன் 3; வயது பெண் குழந்தை ஒன்றும் விபத்தில் சிக்கியது.

விபத்தில் படுகாயமடைந்த மூவரும் பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அம்பாறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக வைத்தியசாலை தகவல் தெரிவித்தன.

உயிரிழந்த சிறுவனின் சடலம் பொத்துவில் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொத்துவில் பொலிசார் ஆரம்பித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் படுகாயமடைந்துள்ள தந்தை, வெளிநாடொன்றில் தொழில் புரிந்துவந்த நிலையில் இரு மாதங்களுக்கு முன்னரே நாட்டுக்கு திரும்பியமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .