Gavitha / 2016 ஜூலை 13 , மு.ப. 02:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய வீடமைப்பு அதிகாரசபை மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை விற்பனை செய்தார் என்ற குற்றச்சாட்டில், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவின் மூத்த சகோதரரிடம் வாக்குமூலமொன்றைப் பெறுவதற்கு, நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிலையில், பாணந்துறையில் அமைந்துள்ள சரத் வீரவன்சவின் வீட்டுக்கு, நேற்றுச் செவ்வாய்க்கிழமை (12) சென்ற நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவினர், அவரிடம் வாக்குமூலம் பெற முயன்ற போதிலும், அவர் சுகவீனமுற்றிருப்பதால், வாக்குமூலத்தைப் பெறாமலேயே திரும்பியுள்ளனர்.
அரசாங்கத்தின் 12 வாகனங்களை, சட்டவிரோதமான முறையில் கையாண்டார் என்று, சரத் வீரவன்சவுக்கு எதிராக, நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
7 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago