2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

விமல் 55 வாகனங்களை ராவணா பலயவுக்கு கொடுத்தார்

Kogilavani   / 2016 ஜூலை 14 , மு.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, அமைச்சராக இருந்தபோது பொறியியல் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான 55 வாகனங்களை, ராவணா பலயவுக்குக் கொடுத்து 690 இலட்சம் ரூபாய்க்கு மேலதிகமான பணத்தை வீணடித்துள்ளார். என இராவணா பலய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இத்தேகந்த சத்தாதிஸ்ஸ தேரர், பாரிய நிதிமோசடி ஜனாதிபதி விசாரணைப்பிரிவில், நேற்றுப் புதன்கிழமை வாக்குமூலமளித்தார்.

இதன்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் அவர், இரண்டுமணிநேரம் வாக்குமூலமளித்துள்ளார்.

2010ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரையிலும், அவ்வப்போது இந்த வாகனங்கள், ராவண பலயவினால் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கான வாடகை, எரிபொருள், சாரதிக்கான சம்பளம் ஆகியன பொறியியல் கூட்டுத்தாபனத்தின் ஊடாகவே கொடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .