2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை

வெளிநாட்டுப் பணங்களில் உதவிகளைச் செய்யலாம்: நிதியமைச்சு

Kanagaraj   / 2016 மே 23 , பி.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்களுக்கு, வெளிநாட்டில் வாழ்கின்ற தானம் செய்யவிரும்புகின்றவர்கள், வெளிநாட்டுப் பண  அலகுகளில் நிதியுதவிகளைச் செய்வதற்கு இலங்கை மத்திய வங்கியினால் ஐந்து கணக்குகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்று, நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி எச்.எஸ். சமரதுங்க தெரிவித்தார்.

அதனடிப்படையில், அமெரிக்க டொலர் மூலமான உதவிகளை 102960002000 என்ற கணக்கிலக்கத்துக்கும் ஸ்டேர்லிங் பவுண்ட்ஸ் ஊடான நிதியுதவிகளை 502961002000 என்ற கணக்கிலக்கத்துக்கும், யென் ஊடான உதவிகளை 502966002000 என்ற கணக்கிலக்கத்துக்கும், ஐரோப்பிய நாடுகளிலிருந்து நிதியுதவிகளை அளிக்கவிரும்புகின்றவர்கள் 502969002000 என்ற கணக்கிலக்கத்தின் ஊடாகவும் நிதியுதவிகளைச் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த கணக்குகளுக்கான நிதிகள் யாவும், சம்பத் வங்கியின் ஊடாகக் கடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, பாதிக்கப்பட்ட மக்களுக்காக வெளிநாடுகளிலிருந்து வழங்கப்படும் நிதியுதவிகள், முகவர்களின் உதவியின்றி வழங்கப்படுமாயின், அவ்வாறு வழங்குவோருக்கு எதிராகக் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .