2025 ஒக்டோபர் 18, சனிக்கிழமை

ஹபரணையில் பொலிஸ் காவலில் இருந்த சந்தேகநபர் மர்மமான முறையில் மரணம்

Super User   / 2010 மே 07 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹபரணையில் பொலிஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவமொன்று தொடர்பில் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவரது மரணத்துக்கு பொலிஸாரே காரணமென உயிரிழந்த சந்தேகநபரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர். 

இருப்பினும் குறித்த சந்தேக நபர் சிறைக் கூடத்தில் வைத்து தற்கொலை செய்திருக்கலாம் அல்லது அவருடன் தடுத்து வைக்கப்பட்டிருந்த மற்றைய சந்தேக நபரால் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிஸ் பேச்சாளர் பிரஷந்த ஜயக்கொடி தெரிவித்தார்.  

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .