2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட நால்வருக்குப் பிணை

Editorial   / 2018 செப்டெம்பர் 20 , பி.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.ஜெயஸ்ரீராம்

நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லாஹ், அவரது மகன் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ், தாஹீர் மற்றும் அபுல்ஹசன் ஆகிய நால்வரும், பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேநபர்களான அந்த நால்வரும், சட்டத்தரணிகள் ஊடாக, வாழைச்​சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (19) ஆஜராகினர். இதன்போதே, மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி முஹமட் றிஸ்வான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.

அவர்கள் நால்வரும், தலா இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான ரொக்கப் பிணை மற்றும் 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுதலை செய்யப்பட்டனர். 

இதேவேளை, வெளிநாட்டுக்குச்  செல்வதாயின் கொழும்பிலுள்ள,  குற்றத்தடுப்புப் பிரிவினரின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டுமெனவும், நீதிமன்றம் தன்னுடைய உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

100 மில்லியன் ரூபாய் பெறுமதியான  நிர்மாணப் பணிகளுக்கான இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களைக் கடத்தியமை தொடர்பாக, வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில், கடந்த 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

பொலிஸ் மா அதிபர் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் செய்யப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமையவே, வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

கடந்த ஆண்டு  பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி, பிரதிவாதிகளால் நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டிருந்த ஊழியர்களை, கடந்த ஆண்டு, பெப்ரவரி மாதம் 29ஆம் திகதியன்று, பிரதிவாதிகள் விரட்டிவிட்டு, இயந்திரங்களைக் கடத்திச் சென்றுவிட்டனரென, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர்.

சந்தேகநபர்களுக்குப் பிணை வழங்கிய நீதவான், வழக்கை எதிர்வரும் 3ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--