2021 மே 15, சனிக்கிழமை

ஆசனப்பட்டிகளை அணிவது ஒக்டோபர் 1 முதல் கட்டாயம்; மீறுவோருக்கு அபராதம்

Super User   / 2011 செப்டெம்பர் 21 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சுபுன் டயஸ்)

வாகனங்களின் முன்புற ஆசனங்களிலிருந்து பயணம் செய்பவர்கள் ஆசனப்பட்டிகளை அணிவது  ஒக்டோபர் முதலாம் திகதியிலிருந்து கட்டாயமாக்கப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர். இவ்விதியை மீறுவோருக்கு எதிராக கடும் அபராதங்கள் விதிக்கப்படவுள்ளன.

முதல் தடவையாக குற்றமிழைப்போருக்கு 1000-2000 ரூபா அபராதமும் இரண்டாவது தடவை குற்றமிழைப்போருக்கு 2000-3000 ரூபா அபராதமும் விதிக்கப்படும். 3 ஆவது தடவை குற்றமிழைப்போருக்கு 3500 ரூபா அபராதம் விதிக்கப்படுவதுடன் அவர்களின் சாரதி அனுமதிப்பத்திரம் ரத்துச்செய்யப்படும்.

1.5 மீற்றருக்கும் குறைந்த உயரமுடையவர்கள் மற்றும்  பதிவுசெய்யப்பட்ட மருத்துவர்களால் ஆசனப்பட்டி அணியக்கூடாதென சிபாரிசு செய்யப்பட்டவர்களுக்கு இதிலிருந்து விலக்களிக்கப்படும்.

வீதி விபத்துகளில் பலர் இறந்தமைக்கு அவர்கள் ஆசனப்பட்டிகளை அணியாதமை காரணமாக இருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புதிய விதிகளை சாரதிகள் பின்பற்றுவதை கண்காணிப்பதற்காக கூடுதலான ரோந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள பொலிஸார் திட்டமிட்டுள்ளனர்.
 


  Comments - 0

 • Ashashi Thursday, 22 September 2011 03:03 AM

  ஆஹா போலீஸ் காரங்களுக்கு நல்ல வருமானம்.

  Reply : 0       0

  lankan Thursday, 22 September 2011 04:50 AM

  இப்போ போலீஸ் காரங்க நல்லா கல்லா கட்டுவாங்க.
  முதலில போலீஸ் வாகனங்களுக்கு பெல்ட் இருக்காணு பாருங்க.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .