2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

மதுபான நிறுவனத்திற்கு 10 கோடி ரூபா அபராதம்

Super User   / 2010 டிசெம்பர் 16 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஹங்வெல்லயிலுள்ள மதுபான உற்பத்தி நிறுவனமொன்றுக்கு கலால் திணைக்களம் இன்று 10 கோடி ரூபா அபராதம் விதித்துள்ளது. 10 கோடி ரூபா வரி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரிலேய இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இதுவரை விதிக்கப்பட்ட ஆகக்கூடுதலான அபராதத் தொகை இதுவெனக் கருதப்படுகிறது.
 

பெருமளவு மதுபானத்தை கையிருப்பில் வைத்திருந்தபோதிலும், வரி அறவிடப்படுவதை குறைப்பதற்காக சொற்ப அளவு மதுபானமே கையிருப்பிலுள்ளதாக இந்நிறுவனம் காட்டியதாக கலால் திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.


இந்நிறுவனம் அபராதத் தொகையில் 5 கோடி ரூபாவை செலுத்தியுள்ளது. எஞ்சிய தொகையை செலுத்துவதற்கு இரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--