2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

ஓஷானிக் வைக்கிங் தமிழர்களில் 10 பேர் ருமேனியாவில் நிர்கதி

Super User   / 2011 பெப்ரவரி 21 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

2009 ஆம் ஆண்டு ஓஷானிக் வைக்கிங் கப்பலில் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முயன்றபோது தடுத்து வைக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களில் 10 பேர் ருமேனியாவிலுள்ள அவசரகால தங்கு நிலையங்களில் நிர்கதியாக உள்ளனர்.

பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர்கள் என அவுஸ்திரேலிய தேசிய பாதுகாப்பு புலனாய்வு சேவைகள் பணியகம் தீர்ப்பளித்த 8 பேரும் அவர்களில் தங்கியுள்ள இரு சிறார்களும் மூன்றாவது நாடொன்றினால் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவில் காலவரையற்ற தடுப்புக் காவலில் வைக்கப்படும் நிலையை எதிர் நோக்குகின்றனர்.

2009 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஓஷானிக் வைக்கிங் கப்பலில் அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முயன்ற 78 இலங்கையரகள் பின்டான் தீவுக்கு அருகில் வைத்து அவுஸ்திரேலிய அதிகாரிகளால் மீட்கப்பட்டனர்.  

இவர்கள் கப்பலை விட்டு வெளியேற மறுத்த நிலையில் 12 வாரங்களுக்குள் 3 ஆவது நாடொன்றில் குடியேற்றுவதாக உறுதியளித்து அவுஸ்திரேலிய அரசாங்கம் அவர்களை கரைக்கு கொண்டு வந்தது.

அவர்களில் அரைவாசிப் பேர் பிரிட்டன், கனடா, நியூஸிலாந்து, நோர்வே போன்ற நாடுகளில் மீள்குடியேற்றப்பட்டனர். 15 பேர் அவுஸ்திரேலியாவில் மீள்குடியேற்றப்பட்டனர்.

எனினும், 17 பேரை மீள்குடியேற்ற 3 ஆவது நாடெதுவும் கிடைக்காத நிலையில்,  ருமேனியாவிலுள்ள யூ.என்.எச்.சி.ஆர். முகாமில் தங்கவைக்கப்பட்டனர்.

அவர்களில் 7 பேரை அவுஸ்திரேலியா ஏற்றுக்கொண்டது. எனினும் ஏனையோர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர்கள் என அவுஸ்திரேலிய தேசிய பாதுகாப்பு புலனாய்வு சேவைகள் பணியகம் தீர்ப்பளித்துள்ளதால் ருமேனியாவில் நிர்க்கதியாக உள்ளனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--