2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

10 சந்தேக நபர்கள் விளக்கமறியலில்

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 20 , பி.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மூன்று நபர்களை கடத்திச் சென்று தாக்கினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் தேடப்பட்டு வந்த பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் உட்பட 10 சந்தேக நபர்களை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது

மூன்று நபர்களையும் கடத்திச் சென்று தாக்கியதுடன், பின்னர் அவர்களை மின்சாரக் கம்பமொன்றில் கட்டி வைத்ததாக நபர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதனால் கடந்த புதன்கிழமை தேடப்பட்டு வந்த இவர்கள் பின்னர் பொலிஸாரிடம் சரணடைந்தனர். 

இவர்கள் மாத்தளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டபோதே, இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--