Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 ஒக்டோபர் 28 , பி.ப. 02:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
(நபீலா ஹுசைன்)
தூத்துக்குடிக்கும் கொழும்பிற்குமிடையில் மிக விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள கப்பல் சேவையின் மூலம் பிரயாணிகள் 100 கிலோகிராம் வரையான பொருட்களை கொண்டு செல்ல முடியும்.
இது தொடர்பில் இரு நாடுகளுக்குமிடையிலான ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த வருட ஆரம்பத்தில் இச்சேவை ஆரம்பிக்கப்படும் என துறைமுக மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்தது.
அரசாங்கம் இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் சேவையை எப்போது ஆரம்பிப்பது என்பதை தனியார் துறையினரே தீர்மானிக்க வேண்டும் என அமைச்சு தெரிவித்தது.
இந்த கப்பல் சேவையின் மூலம் இரு துறைமுகத்திற்கும் இடையிலான பிரயாணிகள் பயனடைவார்கள். இதன் மூலம் சுற்றுல்லா துறையும் அபிவிருத்தியடையும் என நம்புவதாக வர்த்தக கப்பல்துறை பணிப்பாளர் நாயகம் சாந்த வீரகோன் தெரிவித்தார்.
அத்துடன் தலை மன்னாருக்கும் தனுஷ்கோடிக்குமிடையிலான கப்பல் சேவையும் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த கப்பல் சேவை ஏற்கனவே 2003/04 ஆண்டுகளில் திட்டமிட்டிருந்த போதும் பாதுகாப்பு காரணமாக அத்திட்டம் இடைநிறுத்தப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .