2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

நாடளாவிய ரீதியில் 1000 சேதன பசளை உற்பத்தி நிலையங்களை அமைக்க திட்டம்

Super User   / 2011 ஜனவரி 08 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

வடக்கு கிழக்கு உட்பட நாடளாவிய ரீதியில் 1000 சேதன பசளை உற்பத்தி நிலையங்களை அமைக்க கமநல சேவைகள் அமைச்சு திட்டமிட்டுள்ளதாக கமநல சேவை ஆணையாளர்நாயகம் ரவீந்திர ஹேவாவிதாரன தெரிவித்தார்.  

விவசாயிகளின் இரசாயன உரப்பாவனையை குறைத்து சேதன பசளை பாவனையை அதிகரிக்கும் நோக்கில் உள்ளுராட்சி சபைகளின் ஒத்துழைப்புடன் இச்சேதன பசளை நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இரசாயன உரவகை இறக்குமதிக்கென அரசாங்கள் வருடாந்தம் 30 பில்லியன் ரூபாய்களை செலவு செய்கிறது. இதனை 2011ஆம் ஆண்டில் 5 பில்லியன் ரூபாவினாலும் 2012ஆம் ஆண்டில் 10 பில்லியன் ரூபாவினாலும் குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .