2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

இலங்கையில் நாளொன்றுக்கு 1000 கருச்சிதைவு..!

A.P.Mathan   / 2010 ஜூலை 09 , பி.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடளாவிய ரீதியில் இயங்கிவருகின்ற சட்டவிரோதமான கருக்கலைப்பு நிலையங்களினூடாகவும் கருவுறுதல் பற்றிய அறிவின்மை காரணமாகவும் நாளொன்றுக்கு சராசரியாக 1000 கருக்கலைப்புகள் இடம்பெறுவதாக அதிர்ச்சித்தகவல் தெரிவிக்கிறது.

நாடளாவிய ரீதியில் 3000இற்கும் மேற்பட்ட சட்டவிரோத கருக்கலைப்பு நிலையங்கள் இயங்கிவருவதாக சுகாதார கல்விச் சபையின் ஊடகத்துறை தலைவர், வைத்தியர் சாந்த ஹெட்டியாராச்சி தெரிவிக்கின்றார். மிகவும் ரகசியமான முறையில் இந்த கிளினிக்குகள் இயங்கிவருவதால் சரியான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

திருமணமாகிய, திருமணமாகாத பெண்களின் கருக்கலைப்பு தொடர்பான போதிய அறிவின்மை காரணமாகவும் பொருளாதார வசதியின்மையினாலேயுமே இப்படியான கருச்சிதைவுகள் இடம்பெறுகின்றன. அதுமட்டுமல்லாமல் இளம்பெண்கள் தவறான முறையில் கருவுறுகிறார்கள். இவர்கள் முறையான பாலியல் கல்வி அறிவின்மையால் முறையற்ற கருச்சிதைவுக்கு ஆளாகின்றனர். அதேபோல் திருமணமான பெண்களின் பொருளாதாரன பிரச்சினை காரணமாக சீரான குடும்பக்கட்டுப்பாடு முறைமை தெரியாமையினாலேயுமே இப்படியான கருச்சிதைவுகளுக்குக் காரணமாகின்றன எனவும் மேலும் தெரிவித்தார் வைத்தியர் சாந்த ஹெட்டியாராச்சி.
-Lakna Paranamanna

  Comments - 0

  • xlntgson Saturday, 10 July 2010 08:14 PM

    இது அதிர்ச்சி தரும் தகவலே! இந்த எண்ணிக்கையிலான சிசுக்கள் கருவிலே கொல்லப்படுமாயின் அதற்கு இந்த நவீன காலத்தில் அறியாமை காரணம் என்று கூற இயலாது. கூடுதல் படிப்பு காரணம். கருக்கலைப்பு, கருசிதைவு மிக எளிதானது என்றோ மீண்டும் பழைய இளைமை தோற்றத்தை பெற்று நடந்தது, என்ன என்றே தடம் இல்லாமல் மறைத்துவிடலாம் என்றோ நினைப்பதனாலாகும். உண்மையில் இது உடலை உருக்கி அழகை இல்லாமல் செய்து மனநிலை, உடல்நிலை பாதிப்பு போன்ற மோசமான பக்க விளைவு கொண்டது என்பதை அறிந்து தற்காப்பு ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும் மிக எச்சரிக்கையாக!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--