2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

105 அமைச்சர்களுக்கு 48 வீதம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது: ஹரின்

Kanagaraj   / 2013 டிசெம்பர் 06 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஜித் ஸ்ரீவர்த்தன

வரவு-செலவுத்திட்டத்தில் 52 வீதம் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என ஐக்கிய தேசியக்கட்சியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ இன்று கூறினார்.

வரவு-செலவு திட்டத்தின் 48 வீதம் மட்டுமே 105 அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்திலுள்ள ஒரு குறிப்பிட்ட குழுவின் விருப்பப்படியே சகல விடயங்களும் நடப்பதை இது காட்டுகின்றது. இப்போதாவது மக்கள் புத்திசாலித்தனமாக சிந்திக்க வேண்டுமென பெர்னாண்டோ கூறினார்.

பாடசாலை சீருடைகளை வழங்க 1400 மில்லியன் ரூபா போதுமானது. எனினும், இந்த அரசாங்கம் 2000 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. இதிலிருந்து இந்த அரசாங்கம் இவ்வருடம் பாடசாலை சீருடை விநியோகத்தில் 600 மில்லியன் ரூபாவை மோசடி செய்துள்ளது. இந்த வெளிப்படையான மோசடிக்கு கல்வியமைச்சரும் கல்வி சேவை அமைச்சரும் பொறுப்புக்கூற வைக்கப்பட வேண்டும்.

இது தொடர்பில்  இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் நான் முறையிடவுள்ளேன் என அவர் கூறினார்.


  Comments - 0

  • kb Friday, 06 December 2013 12:20 PM

    கடைசியாகக்கிடைத்த தகவலின்படி 48 வீதமாவது கிடைத்ததே என்று 105 பேரும் சந்தோஷப்படுகிறார்களாம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--