2021 மார்ச் 01, திங்கட்கிழமை

அரவிந்த வீட்டில் ரூ. 5.1 மில்லியன் திருட்டு

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 22 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவரும் துடுப்பாட்ட வீரருமான அரவிந்த டி சில்வாவின் வீட்டில், 5.1 மில்லியன் ரூபாய் திருடப்பட்டுள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் அவர் முறைப்பாடு செய்துள்ளார்.

கொழும்பு, தேர்ஸ்டன் வீதியிலுள்ள தனது வீட்டில் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு பெட்டகத்திலிருந்த 5.1 மில்லியன் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.

விடுமுறையை கழிப்பதற்காக தன்னுடைய மனைவியுடன் வெளிநாடொன்றுக்கு சென்றிருந்த அரவிந்த டி சில்வா, நேற்று செவ்வாய்க்கிழமை வீடு திரும்பியுள்ளார்.

வீட்டிலிருந்த பாதுகாப்பு பெட்டகம் திறந்திருந்ததுடன் அதிலிருந்த பணமும் காணாமல் போனமை தெரியவந்தது என்றும் அவர், தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் வீட்டில் பணியாற்றி வந்த 8 ஊழியர்களிடமும் வாக்குமூலங்கள் பெறப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .