Suganthini Ratnam / 2011 ஜனவரி 25 , மு.ப. 09:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சுபுன் டயஸ்)
பயணப் பையில் மறைத்து வைத்து கொண்டு வரப்பட்ட 150 மில்லியன் ரூபாய் பெறுமதியான 10 கிலோ கொக்கேய்ன் போதைப்பொருளுடன் இந்தியப் பிரஜை ஒருவரை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.
இந்தியாவிலிருந்து பாங்கொக்கிற்கு சந்தேக நபர் பயணம் செய்யவிருந்ததாக சுங்க அதிகாரி எம்.வி.ஜயரட்ன தெரிவித்தார்.
'தவறவிட்ட பொதிகளை பெற்றுக்கொள்ளும் இடத்திற்கு இவர் வந்திருந்தார். அங்கிருந்த அதிகாரிகள் இவரது பை தொடர்பில் சந்தேகமுள்ளதாக எமக்கு தெரிவித்தனர்.
இவரது பயணப் பையை ஆராய்ந்தபோது அதில் கொக்கேய்ன் போதைப்பொருள் காணப்பட்டது. இது அண்மைக்காலத்தில் கைப்பற்றப்பட்ட அதிகூடிய தொகையாகும். கொக்கேய்ன் போதைப்பொருள் இலங்கையில் அவ்வளவு பிரபல்யம் இல்லை. இதை இவர் பாங்கொக்கிற்கு எடுத்துச் செல்லவிருந்தாரென நம்புகிறோம்' என எம்.வி.ஜயரட்ன கூறினார்.
முதலில் இவர் பையை பரிசோதனைக்கு உட்படுத்த மறுத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
6 minute ago
12 minute ago
19 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
12 minute ago
19 minute ago