2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

18 புலி உறுப்பினர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

Super User   / 2011 ஜனவரி 20 , பி.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தமிழீழ விடுதலைப் புலிகளின் தீவிர உறுப்பி;னர்கள் எனக் கூறப்படும் 18 பேரை தொடர்ந்து பெப்ரவரி 2 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

வடக்கில் யுத்தத்தின் பின்னர் இடம்பெயர்ந்தோருக்கான முகாம்களில் பொதுமக்களுடன் மறைந்திருந்தபோது பாதுகாப்புப் படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டனர். அதன்பின் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவிடம் இவர்கள் கையளிக்கப்பட்டனர்.

இவர்கள் மீதான விசாரணை பூர்த்தியடையவில்லை என்பதால் பெப்ரவரி 2 ஆம் திகதிவரை விளக்கமறியலில் தடுத்து வைப்பதற்கு நீதவான் உத்தரவிட்டார். (TFT)
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--