2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

உள்ளூராட்சி திருத்தச் சட்ட மூலம் குறித்து கி.மா.சபையில் 19ஆம் திகதி விவாதம்

Super User   / 2010 ஒக்டோபர் 12 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிப்தி அலி)

 

உத்தேச உள்ளூராட்சி தேர்தல் திருத்தச் சட்ட மூலம் தொடர்பிலான விவாதம் கிழக்கு மாகாண சபையில் இம்மாதம் 19ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளதாக கிழக்கு மாகாண சபையின்  தவிசாளர் எச்.எச்.எம்.பாயிஸ் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

 குறித்த உத்தேச சட்ட மூலத்தை நாடாளுமன்றத்தில் சட்ட மூலமாக நிறைவேற்றுவதற்கு முன்னர் மாகாண சபைகளின் அங்கீகாரத்தை பெற வேண்டும் என உயர் நீதிமன்றம் கடந்த வருடம் தீர்ப்பு வழங்கியிருந்தது.

இதற்கினங்க அடுத்த 10 தினங்களுக்குள் மாகாண சபைகளின் அனுமதியைப் பெற வேண்டும் என ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளதற்கினங்க எதிர்வரும் 19ஆம் திகதி விசேட கூட்டம் மூலம் விவாதிக்கப்படவுள்ளதாக தவிசாளர் பாயிஸ் குறிப்பிட்டார்.

இதேவேளை குறித்த உத்தேச சட்ட மூலம் எதிர்வரும் ஒக்டோபர் 18ஆம் திகதி மேல் மாகாண சபையில் விவாதிக்கப்படவுள்ளதாக மேல் மாகாண சபையின் தவிசாளர் சுனில் விஜேயவர்தன தெரிவித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .