2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

"மேயர் வாசஸ்தலத்திலிருந்து 2ஆம் திகதி இம்தியாஸ் வெளியேற்றப்படுவார்"

Super User   / 2010 ஒக்டோபர் 26 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிப்தி அலி)

கொழும்பு மாநகர மேயரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் தொடர்சிசியாக வசித்து வரும்  முன்னாள் மேயர் இம்தியாஸ் முஹமட்டை எதிர்வரும்  நவம்பர் 2ஆம் திகதி சட்டரீதியாக வெளியேற்றவுள்ளதாக கொழும்பு மாநகர விசேட ஆணையாளர் ஒமர் காமில் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

இது தொடர்பில் முன்னாள் மேயர் இம்தியாஸுக்கு கடிதம் மூல்ம் தெரிவித்துள்ளதாகவும் ஒமர் காமில் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் முன்னாள் மேயர் இம்தியாஸுடன் தமிழ்மிரர் இணையத்தளம் தொடர்பு கொண்டு வினவிய போது,

தன்னை எவராலும் மேயர் வாசாஸ்தலத்திலிருந்து வெளியேற்ற முடியாது என்றார்.

"ஜனாதிபதி மஹிந்த ராபஜபக்ஷ அல்லது மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலானா அல்லது முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆகியோரில் எவராவது ஒருவர் தன்னை வெளியேற கூறினால் மாத்திரமே நான் வெளியேறுவேன். அதுவரை வெளியேறமாட்டேன்" என முன்னள் மேயர் இம்தியாஸ் முஹம்மட் தெரிவித்தார்.

தற்போது மேயர் வாசஸ்தலத்திற்குரிய மின் கட்டணம் மற்றும் நீர் கட்டணம் செலுத்துவதை கொழும்பு மாநகர சபை நிறுத்துயுள்ளது. இது தனக்கு எதிராக மேற்கொள்ளும் ஒரு சதி நடவடிக்கையே என இம்தியாஸ் குறிப்பிட்டார்.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--