2025 ஜூலை 02, புதன்கிழமை

20 ஆண்டுகளின் பின்னர் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை திறந்துவைப்பு

Super User   / 2010 மார்ச் 15 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

வலிகாமம் உயர் பாதுகாப்பு வலயப் பகுதியில் அமைந்துள்ள தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவு மற்றும் கிளினிக் இன்று முதல் இயங்க ஆரம்பித்துள்ளன.

யுத்தம் காரணமாக, 1990ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து 1998ஆம் ஆண்டு வரை மானிப்பாயிலும், பின்னர் தெல்லிப்பளை கூட்டுறவு வைத்தியசாலையிலும் மேற்படி வைத்தியசாலை இயங்கிவந்தன.

யாழ் அரசாங்க அதிபர் கே.கணேஷின் வேண்டுகோளுக்கு இணங்கவும், யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேயர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவின் அனுமதியுடனும் மேற்படி வைத்தியசாலை தனது சொந்த இடத்தில் இயங்க ஆரம்பித்துள்ளதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.

யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேயர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க மற்றும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கணேஷ் மேற்படி வைத்தியசாலையை திறந்துவைத்ததாக யாழ் செய்திகள் குறிப்பிடுகின்றன.

நோயாளர்கள் நாளை முதல் தமது சொந்த வாகனங்களில் தெல்லிப்பளை வைத்தியசாலைக்குச் செல்லமுடியும் எனவும் யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன. 

அத்துடன், தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு செல்வதற்கான போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்படவிருப்பதாகவும் யாழ் செய்திகள் குறிப்பிடுகின்றன.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .