2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

காதலில் தோல்வி; கண்டியில் 20 வயது யுவதி தற்கொலை

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 19 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹமட் ஆஸிக்)

கண்டி, கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போதொட பகுதியில் 20 வயது யுவதியொருவர் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. மாலகம்மன குமாரி தமயந்தி என்ற யுவதியே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டவராவார்.

காதலில் தோல்வியுற்ற விரக்தியிலேயே அவர் இவ்வாறு தற்கொலை செய்துகொண்டதாக பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இது குறித்து கண்டி பதில் நீதிவான் சந்தன பிரேமரத்ன மரண விசாரணையினை நடத்தியதுடன் கண்டி வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி எம்.எஸ்.ஏ. அபேசிங்க, இது ஒரு தற்கொலையென அறிவித்தார்.  சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .