2021 மார்ச் 01, திங்கட்கிழமை

ஜி-20ஐ நியமித்தது ஐ.தே.க

Kanagaraj   / 2014 ஒக்டோபர் 16 , மு.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி 20 உறுப்பினர்களை கொண்ட குழுவை (ஜி-20) நியமித்துள்ளது.

இந்த குழு, இரண்டாவது தடவையாக நாளை 17ஆம் திகதி வெள்ளிக்கிழமை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியன் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பிரதித் தலைவர் சஜித் பிரேதமதாச  நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் மைக்கல் பெரேரா, ஜோன் அமரதுங்க, பாலித ரங்கே பண்டார, தலதா அத்துக்கோரள, அசோக அபேசிங்க, ரஞ்சித் மத்துகம பண்டார, பி.ஹரிசன், ஏரான் விக்கிரமரட்ன, அஜித் பி.பெரேரா, அகிலவிராஜ் காரியவசம், ரோசி சேனநாயக்க, வசந்த அலுவிகார மற்றும் ஊவா மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் இந்தக் குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .