2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

மாதாந்தம் 200 கிலோ ஹெரோயின் விற்பனை; 4 மாவட்டங்களில் 40,000 பாலியல் தொழிலாளர்கள்: கபீர் ஹாசிம்

Super User   / 2011 டிசெம்பர் 01 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கெலும் பண்டார, யொஹான் பெரேரா)

நாட்டில் மாதாந்தம் 200 கிலோ ஹெரோயின் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாகவும் நான்கு மாவட்டங்களில் மாத்திரம் 40,000 பாலியல் தொழிலாளர்கள் இருப்பதாகவும் ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

வரவுசெலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு நேற்று உரையாற்றிய கபீர் ஹாசிம் எம்.பி. முன்னெப்போதையும் விட மஹிந்த சிந்தனை கொள்கைகளின் கீழ் நவ தாராளவாத பொருளாதார கொள்கைகளின் அம்சங்கள் பின்பற்றப்படுகிறது எனக் கூறினார்.
'1977 ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜெயவர்தனவினால் அறிமுகப்படுத்தப்பட்ட திறந்த பொருளாதார கொள்கைகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விமர்சித்தார. இப்போதைய அரசாங்கம் பொருளாதாரத்தை மோசமான வகையில் திறந்தமயமாக்கியுள்ளது.

ஜே.ஆர். பொருளாதாரத்தை திறந்த மயமாக்கினார். அவர் சில வரையறைகளுடன் நின்றுகொண்டார். அவர் பொருளாதாரத்தை அழிவடைய விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார். ஆனால் இன்று மக்களை கஷ்டத்துக்குள்ளாக்கும் வகையில் அநாவசியாக பொருளாதாரம் திறந்துவிடப்படுகிறது' என கபீர் ஹாசிம் எம்.பி கூறினார்.

'நாட்டில் நாட்டில் மாதாந்தம் 200 கிலோ ஹெரோயின் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுகிறது. 6 மணித்தியாலங்களுக்கு ஒரு தடவை கொலைச் சம்பவமொன்று பதிவுசெய்யப்படுகிறது.

நான்கு மாவட்டங்களில் மாத்திரம் 40,000  பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர். சிலர் இதை வேலைவாய்ப்பு வழங்குவதற்கான புதுமையான வழி எனக் கூறுகிறார்கள். சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரித்துள்ளது. 1994 ஆம் ஆண்டிலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான கூட்டணியே அதிகாரத்திலுள்ளது' எனவும் அவர் கூறினார்.
 


  Comments - 0

 • Hot water Thursday, 01 December 2011 10:40 PM

  இதில அமெரிக்காவை முந்திடுவோமா?

  Reply : 0       0

  Razeed Thursday, 01 December 2011 10:46 PM

  ஆகலாம், கவலைப்பட வாண்டாம் ,,,,,,,,,,, ஹ ஹ ஹ

  Reply : 0       0

  waaqiff Friday, 02 December 2011 05:25 AM

  நாட்டின் முன்னேற்றம் !!!!!!!!!!

  Reply : 0       0

  nawas Friday, 02 December 2011 07:05 AM

  சரியாஹா சொன்னீர்கள் கபீர் சேர். இனி நமது நாடும் அந்த பாலியல் துறைலதான் முன்னேறும்?

  Reply : 0       0

  anas Friday, 02 December 2011 06:25 PM

  கூடிய சீக்ரம் முதலிடம் வகிக்கும் ஐட்ஸ் இல்

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .