2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

தமிழக தேர்தலுக்கு இலங்கை உதவி; இந்திய காங்கிரஸ் நிராகரிப்பு

Super User   / 2010 ஜனவரி 19 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் வேண்டுகோளுக்கமைய இறுதிக்கட்ட யுத்தத்தில் கனரக ஆயுதப் பாவனை நிறுத்தப்பட்டதென இலங்கை தெரிவித்திருந்தமையை இந்திய காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது.

இந்திய காங்கிரஸ் பேச்சாளர் சிறி சத்தியாரத் சதுர்வேதி டெய்லிமிரர் இணையத்தளத்திற்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே,  இவ்வாறு குறிப்பிட்டார்.

இலங்கைத் தமிழர்கள் மீது  கருணாநிதியின் திராவிட முன்னேற்றக் கழகமும், ஜெயலலிதாவின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் கரிசனை கொண்டிருந்ததாகவும் அவர் கூறினார். இந்த விடயத்தில் எந்தவொரு கட்சியும் தனிப்பட்ட முறையில் இலாபம் பெறவில்லை எனவும் சிறி சத்தியாரத் சதுர்வேதி தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட யுத்தத்தில் கனரக ஆயுதப் பாவனையை நிறுத்துவதாகக் கூறி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இந்திய அரசாங்கத்துடன் உடன்படிக்கையொன்றை மேற்கொண்டதாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க அண்மையில் டெய்லிமிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்திருந்தார்.

இதனாலேயே, கடந்த பொதுத்தேர்தலில் இந்திய காங்கிரஸ் கட்சி தமிழ் நாட்டில் வெற்றிபெற்றிருந்ததாகவும் லலித் வீரதுங்க குறிப்பிட்டிருந்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .