2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

பதவியை தொடருவதற்கு தேர்தல்கள் ஆணையாளர் தீர்மானம்

Super User   / 2010 பெப்ரவரி 03 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேர்தல்கள் ஆணையாளர் தயானந்தா திஸாநாயக்கா தொடர்ந்து பதவியிலிருக்க தீர்மானித்துள்ளார்.

தனது பதவியை இராஜினமாச் செய்யப்போவதில்லை எனவும் ஊடகவியலாளர்களிடம் தயனாந்தா திஸாநாயக்க கூறினார். எதிர்க்கட்சிகள், தனது பணியாளர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு அமையவே தான் தொடர்ந்து பதவியிலிருக்க  தீர்மானித்திருப்பதாகவும் தயானந்தா திஸாநாயக்க குறிப்பிட்டார்.

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர், தனது பதவியை இராஜினமாச் செய்யவிருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அண்மைய ஜனாதிபதித் தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும்  இடம்பெற்றதாக தேர்தல்கள் ஆணையாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .