2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

கல்முனை ஸாஹிரா கல்லூரி அதிபர் பதவி தொடர்பாக சர்ச்சை

Super User   / 2010 ஜூலை 09 , பி.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்முனை ஸாஹிரா கல்லூரியின் அதிபர் பதவி தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்மிரர் இணையதளம் கல்முனை ஸாஹிரா கல்லூரி அதிபர்  மர்ஜுனா ஏ.காதருடன் தொடர்பு  கொண்டு வினவிய போது,

"கடந்த 26 ஆம் திகதி முதல் சுகவீன விடுமுறையில் செல்வதன் காரணமாக பாடசாலையின் நிர்வாக பொறுப்புக்களை மாத்திரம் பிரதி அதிபர் எம்.எம்.இஸ்மாயிலிடம் கையளித்தேன். எனினும், அவர் ஜுன் 28 ஆம் திகதி முதல் தான் அதிபராக நியமிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அத்துடன், எனது அனுமதியின்றி அதிபர் அலுவலகத்தையும் பயன்படுத்து வருகின்றார்" என  தெரிவித்தார்.

மேலும், "பிரதி அதிபர் இஸ்மாயில் அதிபராக நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் எந்தவிதமான ஒரு நியமன கடிதத்தையும் கல்வி அமைச்சு அவருக்கு வழங்கவில்லை. பிரதி அதிபர் எம்.எம்.இஸ்மாயிலின் நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யவுள்ளேன்" எனவும் மர்ஜுனா ஏ.காதர் கூறினார்.

இது தொடர்பில் பதில் அதிபர் எம்.எம்.இஸ்மாயிலிடம் தொடர்பு கொண்டு வினவிய போது, "பாடசாலையில் அதிபர் இல்லாதவிடத்து இரண்டாம் நிலையில் உள்ளவர் அதிபராக பணியாற்றுவார். அந்த அடிப்படையில் கடந்த ஜுன் 28ஆம் திகதி முதல் நான் அதிபராக கடமைகளை பொறுப்பேடுத்துள்ளேன். கல்லூரி அதிபராக கடமையாற்றிய மர்ஜுனா ஏ.காதரின் கடந்த ஜூன் 26ஆம் திகதியோடு ஒய்வு பெறுகிறார். எனினும் ஜூலை 08ஆம் திகதி வரை சேவை கால விடுமுறையில் அதிபராக இருந்தார்" என தெரிவித்தார். 

"நீங்கள் அதிபராக நியமிக்ககப்பட்டமை தொடர்பில் நியமன கடிதம் வழங்கப்பட்டதா?" என தமிழ்மிரர் இணையதளம் பதில் அதிபர் எம்.எம்.இஸ்மாயிலிடம் வினவிய போது "எனக்கான அதிபர் நியமன கடிதம் கல்வி அமைச்சிலிருந்து தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. இக்கடிதம் விரைவில் தன்னை வந்தடையும்" என எம்.எம்.இஸ்மாயில் குறிப்பிட்டார்.

இச்சர்சை தொடர்பாக  கல்முனை வலய கல்வி பணிப்பாளர் டி. தெளபீகை தொடர்பு கொண்டு வினவிய போது, "கல்முனை ஸாஹிரா கல்லூரியின் அதிபராக மர்ஜுனா ஏ.காதரே தொடர்ந்து செயற்படுகின்றார்.  தற்போது அவர் சுகவீன விடுமுறையில் சென்றுள்ளதால் பதில் அதிபராக எம்.எம்.இஸ்மாயில் செயற்படுகின்றார். இதேவேளை கடந்த 28 ஆம்  திகதி தான் கல்லூரியின் பிரதி அதிபராக கடமைகளை பொறுப்பேடுத்தாக தெரிவித்து எம்.எம்.இஸ்மாயில் கடிதம் ஒன்று அனுப்பியுள்ளர்" என தெரிவித்தார்.

மர்ஜுனா ஏ.காதர் இலங்கை வரலாற்றில் முஸ்லிம்  ஆண்கள் பாடசாலை ஒன்றுக்கு நியமிக்கப்பட்ட முதல் முஸ்லிம் பெண் அதிபர் என்பது குறிப்பிடத்தக்கது. (R.A)

  Comments - 0

 • Deva Saturday, 10 July 2010 04:01 AM

  முஸ்லீம் ஆண்கள் பாடசாலைக்கு பெண்ணொருவர் அதிபராக இருப்பதா என்ற கேள்வியும் இதன் பின்னணியி்ல் இருக்குமோ?

  Reply : 0       0

  s k gunarasa Saturday, 10 July 2010 11:22 PM

  அமைச்சர் பதவிகளை போன்று தற்போது இதற்கும் போட்டியோ?

  Reply : 0       0

  srisanth Saturday, 10 July 2010 11:55 PM

  இந்த வேலையை செய்றத விட, கடலை வண்டில் தள்ளலாம்.

  Reply : 0       0

  Amjad Sunday, 11 July 2010 01:55 PM

  இப்படியான சிலரின் பதவி மோகத்தால்தான் எமது கல்லூரி இன்னும் வீழ்ச்சியிலேயே இருக்கின்றது. அந்தோ பரிதாபம் சாஹிராவின் நிலை.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .